நண்பனின் மரணம், மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை

மதுரை, சுப்பிரமணியபுரம் ஹரிஜன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் திருப்பதி 27. இவரது நண்பர் திடீரென்று இறந்துவிட்டார். இதனால், திருப்பதி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், துக்கம் தாளாமல் வீட்டில் தூக்குப்போட்டு திருப்பதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, திருப்பதியின் மனைவி தமிழ்ச்செல்வி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top