நடுத்தர மக்களுக்கு மருத்துவ படிப்பு எட்டா கனியாக உள்ளதாக உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் வேதனை

Ukrainestudents.jpg

உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு அதிகமாக உள்ளதாலேயே வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய சூழலுள்ளது என்று கூறினார். 2016ம் ஆண்டுக்கு முன் 5 லட்ச ரூபாய் கல்விக் கட்டணம் 30 லட்ச ரூபாய் நன்கொடை என்றிருந்த நிலை, மருத்துவ படிப்பிற்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு வந்த பின் கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு சில கல்வி நிறுவனங்களில் இந்த கட்டணம் கடந்த சில ஆண்டுகளில் 90 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டிருக்கிறது. கல்விக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் ஜி.எஸ்.டி. வருவாயை எதிர்பார்க்கும் மத்திய அரசு, மாணவர்களின் நலனில் அதே அளவுக்கு அக்கறை காட்டி வருகிறதா என்பது மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணமே சான்றாக உள்ளது. இந்தியாவில் போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லாததும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் மூலம் நூதன முறையில் அரசு லாபம் பார்க்க முயல்வதாலும் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்த மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

scroll to top