நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவாக பேசிய தி.மு.க.பேச்சாளர் மீது 5 பிரிவுகளில் கீழ் வழக்கு

BeFunky-collage-86-scaled-copy.jpg

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரான நடிகை குஷ்பு குறித்து அவர் தரகுறைவாக பேசியது சமுக வளைதளங்களில் வெளியானது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார். இதையடுத்து தமது பேச்சிற்கு சைதை சாதிக்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரை மன்னிக்க முடியாது என்று குஷ்பு கூறியிருந்தார். இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

scroll to top