நடிகை குஷ்புவுக்கு கொரோனா

நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய்,விஷ்ணு விஷால் நடிகைகளில் த்ரிஷா, மீனா உள்ளிட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனாவின் இரண்டு அலைகளில் தப்பித்தேன். தற்போது மூன்றாவது அலை என்னை பிடித்துவிட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், என்னை தனிமைப்படுத்திகொண்டேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

scroll to top