காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். இவர் சமீபத்தில் நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மணிகண்டன் இயக்கியுள்ள நரை எழுதும் சுயசரிதம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ல இந்தத் திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மிர்ச்சி விஜய், சிவசங்கரி, ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு பவன் இசையமைத்துள்ளார். ஆர்.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.