நடிகர் சூர்யாவின் 47- வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், அவருடைய ரசிகர்கள் அவர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள் .
அதன் ஒரு பகுதியாக, மதுரையில் உள்ள அவருடைய ரசிகர்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை எளிய மக்களுக்கு உதவி செய்தல், முதியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்குதல் மற்றும் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தல் இது மட்டுமில்லாமல், அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதாக பதிவு செய்துள்ளனர். நடிகர் சூர்யா ரசிகர்கள் செய்த இந்த செயல் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் : உடல் உறுப்பு தானம் பதிவு செய்த ரசிகர்கள்
