நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. உருமாறிய ஒமைக்ரான் தொற்றாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.