நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், சமீபத்தில் அமெரிக்கா சென்றார். பாதுகாப்பாக இருங்கள்அங்கு, சிகாகோ நகரில் கட்சி நிர்வாகிகள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். சமீபத்தில் சென்னை திரும்பிய கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால்,போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.கமல் ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர். ‘அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய பின், லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. ‘மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய் பரவல் நீங்க வில்லை என்பதை உணர்ந்து, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என தெரிவித்து உள்ளார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பு:நடிகர் கமல், மூச்சு குழாயின் அடிப்பகுதியில் ஏற்பட்ட தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக, மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த போது, கொரோனா தொற்று உறுதியானது. இதனால், மருத்துவ கண்காணிப்புக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.