நடந்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

குமரியில் மீன் விற்கும் மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குளச்சல் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான அரசுப் பேருந்தில் ஏறிய மீன் விற்கும் மூதாட்டியை மீன் நாற்றம் வீசுவதாகக் கூறி நடத்துடன் இறக்கி விட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தில் ஓட்டுநர், நடத்துநர், நேரகாப்பாளர் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்க தாக உள்ளது.எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

scroll to top