நகைக்கடை உரிமையாளரிடம் தங்கம் மோசடி – கணவன் மனைவி கைது

Untitled-1-2-scaled.jpg

கோவை பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வரும் பாஸ்கர் என்பவர் செல்வபுரம்,அசோக் நகரை சேர்ந்த தம்பதிகளான தீபக்-வர்ஷினி ஆகியோரிடம் 20.51._444 கிராம் தங்கத்தை நகை செய்து கொடுக்குமாறு கொடுத்திருக்கிறார் ஆனால் தங்கத்தை இருவரும் நகை செய்து தராமல் மோசடி செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 18 லட்சம் இருக்கும். பாஸ்கர் இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா ,சப் இன்ஸ்பெக்டர் செல்வி பாமா ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீபக், வர்ஷினி, ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top