நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடக்கிறது என்றும், பிப்ரவரி 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. 490 பேரூரட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன.மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி துவக்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top