தோழர்களின் கரம் அறக்கட்டளை பள்ளி நூலகம் அமைத்தல்

WhatsApp-Image-2021-10-19-at-12.10.55.jpeg

கோவையில் உள்ள தோழர்களின் கரம் அறக்கட்டளை, சமூக சேவை ஆர்வம் நிறைந்த இளைஞர்களால் துவக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உணவு வழங்கல், பள்ளிகள் சீரமைத்தல், மருத்துவ உதவிகள் வழங்கல், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு வழங்கல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு அரசுப் பள்ளியில் ஒரு நூலகம் அமைத்துத் தர அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயிலும் அப்பள்ளிக்கு, உரிய புத்தகங்கள் மற்றும் புத்தக அலமாரி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, இராம செட்டிபாளையத்தில் அமைந்துள்ள பேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 5,500 மதிப்புள்ள புத்தக அலமாரி மற்றும் சுமார் 400 புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை கௌசல்யா, இளங்குருதி  மன்ற உறுப்பினர் தாரணி மற்றும் தோழர்களின் கரம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top