பாண்டியநாடு பண்பாட்டு மையம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மதுரை திருப்பரங்
குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது: ஏற்கனவே, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அகழாய்வு மற்றும் புதிதாக அகழாய்வு நடத்துவதற்காக 5 கோடி ஒதுக்கீட்டு செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தொல்லியல் துறை சார்பில் புதிய முன்னெடுப்புகளை உருவாக்கிடவும், அதன் வாயிலாக தமிழ் பண்பாட்டை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் புதிதாக மூன்று இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள உள்ளது.
தென்
மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் தும்ப கோட்டையிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் திலுக்கர் பட்டியிலும், அகழாய்வு மேற் கொள்வதற்கு தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
குறிப்பாக, கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், எட்டாம் கட்ட அகழாய்வை தொடர்ந்து நடத்துவதற்கும், உள்ளிட்ட மற்ற இடங்களிலும் அகழாய்வு மேற் கொள்வதற்கும் தமிழக அரசு ஒதுக்கீட்டு உள்ள நிதியில் மேற்
கொள்ளப்
படவுள்ளது.
கொற்கையில் கடல் ஆய்வுகளின் மூலம் தொல்லியல் கலத்தில் புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளோம்.
தொல்லியல் துறையும் அருங்காட்சிய துறையும் இணைந்து சென்னை அருங்
காட்சியகத்தில் ஒரு புதிய கட்டிடம் நவீன வசதிகளோடு உலகத் தரத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்
கிறது.
கீழடி அருங்காட்சியகம் பணிகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டு 12 கோடி பதிப்பில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியத்தை முதல்வர் நேரடியாக வந்து திறக்க உள்ளார்.
சிறு தொழில்களை மீட்டெடுப்பதற்கு முதலமைச்சர் பல்வேறு சலுகைகளைஅறிவித்துள்ளார்.
எங்கேயாவது தொல்லியல் சின்னங்கள் இருந்தால் அங்கு எந்த ஒரு குவாரி பணிகளும் நடைபெற கூடாது, என மிகக் கடுமையான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தொல்லியல் சின்னங்களை காப்பாற்றுவது நமது கடமை சேதப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும் என, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்