தொண்டாமுத்தூர், பேரூர் உள்பட முக்கிய பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக

images.jpeg-57.jpg

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி, 3 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், சமத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8ல் திமுகவும், 4ல் காங்கிரசும் வெற்றி பெற்றது. வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது. 19 வார்டுகளில் தி.மு.க. வெற்றி, தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர். பேரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13ல் திமுகவும், 2ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் 50%க்கு மேலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

scroll to top