தொடர் காத்திருப்புப் போராட்டம் ஆசிரியர் கூட்டணியினர்

மதுரையில், தமி்ழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டக் கிளை சார்பாக, தமிழக முதல்வரின் தனிக்கவனத்தை ஈர்த்திட மாபெரும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மதுரையில் ,கள்ளர் சீரமைப்பு ஆசிரியர்கள் நீண்டகால கோப்புகளை சரி செய்திட வலியுறுத்தியும், 10 ஆண்டுகளாக காலியாக உள்ள எழுபத்தி ஆறு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும் மதுரை பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மாவட்ட த் தலைவர் த.முருகன், மாவட்ட செயலாளர்
பே. தீணன், மாவட்டப் பொருளாளர் சீ. வேணி மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியினர் பங்கேற்றனர்.

scroll to top