ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன
கோவை – கொச்சின் சாலையில் தமிழக கேரள எல்லையாக விளங்குவது வாளையாறு. இது வெறும் எல்லை மட்டுமல்ல; அடர்ந்த வனக்காடு. 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே நிலக்கரி ரயில் ஓடினபோது அதன் டிரைவர் ஒருவர் புலி அடித்து செத்த வரலாறு கல்வெட்டாகவே பதிக்கப்பட்டுள்ளது. ஒரு காட்டில் புலி இருக்கிற தென்றால் அதில் அத் தனை வளங்களும், ஏராள மான விலங்குகளும் இருக்கிறதென்று அர்த்தம். அவற்றின் பாதுகாப்பினை உத்தேசித்தே இங்கே இருந்த மீட்டர் கேஜ் ரயில்பாதையை பிராட்கேஜ் ரயில்பாதையாக மாற்றுவதை தவிர்த்து வந்தது பிரிட்டீஸ் அரசாங்கம்.
ஆனால் பின்னாளில் நம் ரயில்வே துறை இதையெல் லாம் கண்டு கொள்ள வில்லை. மீட்டர்கேஜ் ரயில்பாதையை ஒட்டி, பிராட்கேஜ் பாதையும் போட்டு அதிவேக எக்ஸ் பிரஸ் ரயில்கள் இயக்கின. வனவிலங்குகள் நடமாடும் இந்தப் பகுதியில் 30- 40 கிலோமீட்டர் வேகத் தில்தான் ரயில்கள் இயக்கப் படவேண்டும் என்ற எழுதப் படாத விதியை 100- 120 -140 கிலோமீட்டர் என மாற்றிக் கொண்டார்கள். அது முதலே ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
2000 ஆம் ஆண்டில் வாளையாறு மொட்டைப் பாறை வனப்பகுதியில் 2000 ஆம் ஆண்டில் 4 வயது குட்டியானை அதிவேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயி லில் அகப்பட, அதை காப்பாற்றப்போன தாய் யானையும் பலியானது. அடுத்த 6 மாதங்களில் இதே வாளையாறு எல்லையின் கேரள பகுதியில் இன்னொரு யானை ரயிலில் அடிபட்டு இறந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 2008ம் ஆண்டு, பிப்., 4ம் தேதியன்று அதிகாலை 1:30 மணிக்கு, இதே கோவை வனக்கோட்டப்பகுதியில் குரும்பபாளையம் அருகே ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதில் ஒரு யானை நிறைமாத கர்ப்பிணி. ரயில் மோதியதில் தாய் வயிறு கிழிபட்டு அதனுள்ளிருந்த குட்டியும் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தது பார்ப்போர் நெஞ்சை கரைப்பதாக இருந்தது.
இதன் பின்னே இருமாநில வனத்துறை அதிகாரிகளும் பாலக்காடு, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளும் இணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் போட்டனர். ரயிலில் யானை அடிபட்டு இறக்காமல் இருக்க மதுக்கரை- வாளையாறு ரயில் பாதைகள் இடையே 30- 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்குவது, இப் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘யானைகள் கடக் கும் இடம்!’ என்பதற்கான எச்சரிக்கை பலகைகள் வைப்பது, யானைகள் ரயில் ட்ராக்கில் இருந்தால் உடனே ரயிலை நிறுத்தும்படி ரயில் ஓட்டுனர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதாக எல்லாம் முடிவுகள் எட்டப்பட்டது.
ஆனால் எச்சரிக்கை பலகை கள் வைக்கப்பட்டதே ஒழிய ரயிலின் வேகம் கட்டுப் படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.
அதன் விளைவு. அடுத்த ஆண்டே கேரள வாளையாறு பகுதியில் 2 யானைகளும், 2009 ஜீலை மாதத்தில் கஞ்சிக்கோடு பகுதியில் ஒரு யானையும் ரயிலில் அடிபட்டு இறந்தது. அதன் பிறகு மதுக்கரை மகராஜ் என்ற யானை தமிழக வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட நாளில் அதன் ஜோடி யானை இதே வாளையாறு எட்டிமடைப்பகுதியில் ரயிலில் அடிபட்டு இறந்தது.
அதன் பிறகும் கேரள-தமிழக வனத்துறைக்கும், ரயில்வே துறைக்கும் இடையே, ‘யானைகள் ரயிலில் அடிபடாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம்!’ என்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஏதேதோ தீர்வுகள் எட்டப்பட்டதாக வாய்மொழியாக சொல்கிறார் கள். ஆனால் பாருங்கள். கடந்த வெள்ளியன்று இரவு
10:05 மணிக்கு, மீண்டும் அதே வாளையாறு பகுதியில் கேரள வழித்தடத்திலிருந்து வந்த ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.
‘‘வனப்பகுதியில் அனுமதிக் கப்பட்ட வேகத்தை (30 கி.மீ., வேகம்) விட அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதும், அதுவே ரயில் அடிபடும்போது பெய ரளவிற்கு சில நாட்கள் வேகம் குறைத்து இயக்குவதும், ரயில் டிரைவர்கள் இஷ்டம்போல் செயல்படுவதும்தான் இந்த யானைகள் கொல்லப்படு வதற்கு காரணம்!’’ என்ற வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் இப்போது, ‘இந்த குறிப்பிட்ட ரயிலை இயக்கிய ரயில் டிரைவர்கள் இருவர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.