வரதராஜபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளி வகுப்புக்குள் புகுந்து மாணவர்கள் மீது விழுந்த நல்லப்பாம்பை கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் தோட்ட வேலை செய்து வரும் பாலசுப்ரமணியம் (50) என்பவர் விரைந்து செயல்பட்டு பிடித்தார். அப்போது அவரது இடது கைவிரலில் நல்லப்பாம்பு கடித்தது.
இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார். பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது ஏறிய கொடிய விஷம் கொண்ட நல்லப்பாம்பை அவர் தன் உயிரையும் துச்சம் என மதித்து குழந்தைகளை காப்பாற்றிய அவரை ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், இஎஸ்ஐ டாக்டர்கள் வெகுவாக பாராட்டினர்.