தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது

தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தலில் போலியான வாக்குப்பதிவுகளை குறைக்கும் வகையிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்காகவும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். மாசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மக்களவையில் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு இணங்க இச்சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

scroll to top