மதுரை மாவட்ட இந்து முன்னணி சார்பில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமிகள் திருக்கோயில் பல ஆண்டுகாலமாக பங்குனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடைபெற்ற பங்குனி தேரோட்டத்தின் போது, பெரிய தேரில் உள்ள வலது புறம் குதிரையின் ஒரு பகுதி உடைந்து போனது. தற்போது, இந்த ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற உள்ளது. இதுவரை உடைந்து போன தேர் சரி செய்யப்படவில்லை. தேரை சரி செய்ய உத்தரவிட வேண்டும் என ,மதுரை மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.