தேசிய விருதுகள் வழங்கும் விழா கொடி கட்டி பறக்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள்

2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முறை தமிழ் படங்கள்  ஏராளமான தேசிய விருதுகளை வாங்கியுள்ளன. அந்த வரிசையில் முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரைத் துறையின் உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழில் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் பெற்றிருந்த இந்த உயரிய விருதை தற்போது ரஜினிகாந்த் 2வது முறையாக  பெற்றுள்ளார். அதனை  தொடர்ந்து சிறந்த திரைப்படம் பட்டியலில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான ஆடுகளம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்திற்கு பின்னர் தனுஷ் பெறும் இரண்டாவது தேசிய விருது இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் பங்கா மற்றும் மணிகர்ணிகா உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தட்டி சென்றுள்ளார்.2019 ஆம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் கே.டி கருப்பு படத்தில் நடித்ததற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும், அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒத்த செருப்பு படத்தின் ஒலிக்கலவை பணிகளுக்காக ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளது  

scroll to top