தேசிய மகளிர் ஆணைய நாள்: பிரதமர் மோடி நாளை காணொலிக் மூலம் உரையாற்றுகிறார்

30வது தேசிய மகளிர் ஆணைய நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ‘அவள் மாற்றத்தை ஏற்படுத்துபவள்’ என்கிற தலைப்பில் பிரதமர் பேசுகிறார். மாநில மகளிர் ஆணையங்கள், மாநில அரசுகளின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைகள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், பெண் தொழில்முனைவோர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

scroll to top