தேசிய பாதுகாப்பு துணை ஆலோசராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்தவர் விக்ரம் மிஸ்ரி, சமீபத்தில் மிஸ்ரிக்கு பதிலாக பிரதீப் குமார் ராவத் சீனாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இவர், 1989-பேட்ச் ஐ.எப்.எஸ்., கேடர் ஆவார். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்திலும், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

scroll to top