தேசிய பத்திரிகை தினம் துணை ஜனாதிபதி வாழ்த்து

“சமூக வலை தளங்களில் போலிச் செய்திகள் பரப்பப் படும் இந்த காலகட்டத்தில் துல்லியமான, உண்மையான மற்றும் நடுநிலை செய்திகள் மற்றும் தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள் பரப்பப்படும் தற்போதைய காலகட்டத்தில் துல்லியமான, உண்மையான மற்றும் நடுநிலை செய்திகள் மற்றும் தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பரபரப்பு செய்திகளை தவிர்த்து, பத்திரிகை துறையின் அடிப்படைக் கொள்கைகளை ஊடகங்கள் நிலை நிறுத்த வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்:போலிச் செய்திகளின் பரவலை தடுக்க ஊடகங்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்.தேசிய பத்திரிகை தினம் என்பது நாட்டு மக்களின் முக்கியமான பிரச்னைகளை எழுப்புவதில் தன் பங்கை பிரதிபலிக்கும் மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்திய ஜனநாயகத்தில் ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

scroll to top