தேசிய நெடுஞ்சாலையில் மெகா பள்ளங்கள்- வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் அபாயம்

மதுரை திருநகர் 98-வது வார்டு திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் பெங்களூர் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில், மெகா சைஸ் பள்ளங்கள் மற்றும் குண்டும் குழியுமாக இருக்கிறது. அவ்வழியாக மிக அருகில் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல அரசு போக்குவரத்து களும் வழியாக செல்கின்றனர். மக்கள் மிக அச்சமாகவும் ஆபத்தான நிலையில் பயணிக்கிறார்கள். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி பள்ளங்கள் தெரியாமல், இருப்பதால் விபத்து சிலர் கீழே விழுந்து காயம் ஏற்படுவதுடன் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர். சென்னையில் நடந்தது போன்ற சம்பவம் ஒரு உயிர் போன பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்புகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து பொது மக்களின் உயிர் காக்க மாவட்ட ஆட்சியாளர் மற்றும் வட்டாட்சியர் உத்தரவிட வேண்டுமென பொதுமக்களும் சமூக வரும் கோரிக்கை விடுக்கின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா? மாவட்ட நிர்வாகம்.

scroll to top