மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளான மாணவர்களுக்கு குடற்புழு மாத்தரைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர், தெரிவிக்கையில்:-
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளில் 20.6 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர். இது சராசரியாக 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளில் 41.6 சதவீதம் ஆகும். ஆனால்இ உலகளவில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளே குடற்புழு தொற்று ஏற்படும் நிலையில் உள்ளனர்.
மேலும், 15 முதல் 19 வயதினரிடையே 54 சதவீத பெண்களும் 29 சதவீத ஆண்களும் இரத்த சோகையினால் பாதிக்கப்படுகிறார்கள். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38.4 சதவீதம் உடல் வளர்ச்சி குன்றியும் 35.7 சதவீதம் எடை குறைவாகவும் உள்ளனர். குடற்புழு தொற்றானது மோசமான சுற்றுப்புற சுகாதாரத்தினாலும் முறையான கழிப்பறையை பயன்படுத்தாத காரணத்தினாலும் உருவாகின்றன.
இந்த குடற்புழுக்களால் குழந்தைகளுக்கு இரத்தசோகை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தையினுடைய உடல்நலத்தை பாதிக்கின்றன.
மத்திய அரசு மேற்கண்ட குறைபாட்டை தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை (மார்ச் மற்றும் செப்டம்பர்) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினமாக அனுசரித்து வருகிறது.
வருகிற 14.03.2022 முதல் 19.03.2022 வரை 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அல்பென்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 21.03.2022-அன்று மாத்திரைகள் வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிக்கு செல்லாத குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வீடு தேடி சென்று வழங்கப்படும். மேலும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பென்டசோல் மாத்திரை வீடு தோறும் சென்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அல்பென்டசோல் குடற்புழு நீக்க மாத்திரையால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு அறிவுத்திறன் மற்றும் உடற்வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
மதுரை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்ட குழந்தைகளில் 973160 நபர்களுக்கும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களில் 225815 நபர்களுக்கும் ஆக மொத்தம் 1198975 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்க
ப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியத்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)
செந்தில் உடன் இருந்தார்.