தேசிய அரசியலில் பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுவோம் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.கவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள். ஆகையால்தான் பா.ஜ.கவுடன் உடன்பாடு ஏற்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அ.தி.மு.க-பா.ஜ.க தனித்தனியே போட்டியிடுகிறது. தேசிய அரசியலில் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க இணைந்து செயல்படும். என்று தெரிவித்தார்.

scroll to top