தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

IMG_20211006_111957-e1633520429567.jpg

மத்திய அரசால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் குறித்து கிராம புறங்களிலும் நகர் புறங்களிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. . அதனை தூய்மை இந்தியா கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதையடுத்து தனியார் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பயிற்சி ஆட்சியர் சரண்யா ராமசந்திரன் மற்றும் பிற அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top