தூய்மைப் பணியாளர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சம்பளத்தை ரூ 100ல் இருந்து ரூ 475 ஆக உயர்த்தி தர வலியுறுத்தியும் வேலை தொடங்கும் நேரத்தை 5 மணியில் இருந்து 7 மணியாக மாற்ற கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்ப்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் ஆக்கவும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

scroll to top