தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே 22ந்தேதியன்று நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில், சம்பவ இடத்திலேயே 13 பேர் பலியானார்கள்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இதையடுத்து, நீதிபதி அருணாஜெகதீசன் பல்வேறு கட்டங்களாக , ஏராளமானோரை அழைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் விசாரணைக்கு ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதையடுத்து, இன்று கிரிஜா வைத்தியநாதன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.