துப்பாக்கியுடன் வாலிபர் கைது

பெருங்குடி போலீசார்சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் பரம்புப்பட்டியில் ரோந்து பணியில் சென்ற போது மேல தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் 24 என்ற வாலிபர் போலீசை கண்டதும் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டி பிடித்தனர்.பின்னர் அவரிடம் சோதனை செய்தபோது அவர் 5 அடி நீளமுள்ள நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.அவர் எங்கிருந்து துப்பாக்கி வாங்கினார்,எதற்காக துப்பாக்கியுடன் பதுங்கிஇருந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top