ராஜஸ்தான் மாநிலத்தி லுள்ள கித்தானா கிராமத்தில் 18 மே 1951 அன்று பிறந்த வர் ஜக்தீப் தன்கர் (71). சித்தோர்கர் சைனிக் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், செய்ப்பூர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
ராஜஸ்தானில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியிலிருந்து 1989-91இல் ஒன்பதாவது மக்களவையில், ஜனதா தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1993-98 ராஜஸ்தானின் கிஷன்கர்ட் இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முன்னாள் தலைவராக இருந்தார். 2019 ல் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவரை மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார். இவர்
2022 துணை குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றார்.
துணை குடியரசு தலைவராக ஜக்தீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
