தீ விபத்து: ரூபாய் 25 லட்ச வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சாம்பல்

மதுரை பார்க் டவுன் எக்ஸ்டென்ஷன் முத்தமிழ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் 36 . இவருக்கு சொந்தமான வீடு, எஸ். ஆலங்குளம் எஸ் வி பி நகர் 2வது தெருவில் உள்ளது. இந்த வீட்டில் சம்பவத்தன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டு ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின .
இந்த விபத்து குறித்து, பிரதீப் கூடல்புதூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து , தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top