தீபம் ஏற்றிய போது தீப்பிடித்து இளம்பெண் பலி

வீட்டில் தீபம் ஏற்றிய போது ஆடையில் தீப்பிடித்து இளம்பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரப்பாளையம் டி.டி. மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மனைவி பரமேஸ்வரி38. இவர் சம்பவத்தன்று வீட்டில் தீபம் ஏற்றினார் .
அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடுத்தியிருந்த ஆடையில் தீப்பற்றியது. தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

scroll to top