தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

WhatsApp-Image-2023-05-15-at-5.20.56-PM.jpeg

​தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
​​
சில தினங்களுக்கு முன்பு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து இத்திரைப்படம் ஒரே நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே திரையரங்கில் ஓடியது.  இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் இத்திரைப்படத்தை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி திரையிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் திரைப்படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை. இந்நிலையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி மண்டியிட்டு மனு அளித்தனர்.

scroll to top