திரையரங்குகள் 100% இருக்கை, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி

n1.jpg

திரையரங்குகள் 100% இருக்கை, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நலவாழ்வுத்துறை, வரு வாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்டவற்றின் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து, மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் ஊரடங்கு நவம்பர் 15ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழகஅரசு ª வளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறை யில் நடத்த அனு மதிக்கப்படும். திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்க ளுடன் நவம்பர் 1ந்தேதி முதல், நிலை யான வழிகாட்டு நடைமுறைகளைப்பின் பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கனவே அனு மதிக்கப்பட்டுள்ள மதுக் கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி திரு விழாக்கள் மற்றும் அரசி யல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

scroll to top