திரையரங்குகளில் வெளியாகும் சந்தானத்தின் சபாபதி

தமிழ்சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம். ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின்பு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே தேர்வு செய்தார். அந்த வகையில் ‘வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம்’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமனார். இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் நடித் தார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஏ1 திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ரீமேக் பாடலான ‘ பெயர் வச்சாலும்’ பாடல் அனைவரின் ஃபேவரெட்டாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் உரு வாகியுள்ள ‘ சபாபதி’ படத் தின் ட்ரைலர் தற்போது வெளியாகிவுள்ளது.படத் தில் ஊர்வசி, புகழ், முனிஸ்காந்த், மதுரை முத்து உள்ளிட்டோர் முக் கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீனிவாசா ராவ் இயக்கிவுள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சபாபதி திரைப்படம் நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

scroll to top