திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்

WhatsApp-Image-2022-06-10-at-10.18.07-AM.jpeg

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் , ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விவேகானந்த கல்லூரி அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அக தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் பண்ணை பார்மசி கல்லூரி பேராசிரியர் முனைவர் பாலகுமார் கலை மற்றும் அறிவியல் தகவல் தொடர்புகளின் எழுத்து மற்றும் வெற்றிகரமான கட்டுரை வெளியிட்டு திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதன்மை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் வடிவேல் நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்வை வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

scroll to top