திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், குடியரசு தினவிழா

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 73வது இந்திய குடியரசு தின விழா  இன்று (26-1-2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். விவேகானந்த கல்லூரியில் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார். கல்லூரி  துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள நரேந்திராநகர் குடியிருப்பு சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவியப்
போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு, கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். விவேகானந்த கல்லூரி விளையாட்டுத் துறை இயக்குனர் சீனி முருகன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை, வேதியியல் துறை தலைவர் சேர்வாரமுத்து தொகுத்து வழங்கினார். விவேகானந்த கல்லூரி ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் நரேந்திராநகர் குடியிருப்பு வளாகம் குடியிருப்புவாசிகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்தனர். தேசிய கீதம் இசைக்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

scroll to top