திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் காந்தி ஜெயந்தி தின கருத்தரங்கம்:

Pi7_Image_WhatsAppImage2022-10-03at20.19.46.jpeg

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் காந்தி ஜெயந்தி தின கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வை, அகத்திர உறுதி மையமும் காந்திய சிந்தனை அரங்கமும் இணைந்து நடத்தியது.
அகத்திர உறுதி மையம் மற்றும்
காந்திய சிந்தனை அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.
கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி மற்றும் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேல்முறையே மாணவர்கள் முறையே ஜெய்ஹரிஷ், அய்யாதுரை, போத்திராஜ், நந்தகுமார், பிரசன்னா, நிதீஷ்குமார் சுப்புராஜா, ரூபன், ஜிவித், மணிகண்டபிரபு ஆகியோர் காந்திய சிந்தனைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய தலைப்புகளில் பேசினர்.
பேசிய மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கல்லூரி முதல்வர் வழங்கினார். மாணவர் ரதீஷ் பிரசன்னா நன்றி உரை கூறினார். மாணவர் கோகுல் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

scroll to top