திருவிழாவிற்க்கு கட்டப்பட்ட அலங்கார சாரம் திடீரென சரிந்து மின்கம்பத்தில் விழுந்து விபத்து

WhatsApp-Image-2022-06-11-at-10.42.23-AM.jpeg

மதுரையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த சூழ்நிலையில், மாலையில், திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதுடன் மழை பெய்யத்துவங்கியது. இந்த நிலையில், மதுரை, எம் .கே. புரம் பகுதியில் ,உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் சமீப நாட்களாக திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை மதுரையில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில் கோவில் திருவிழாவிற்கு அமைக்கப்பட்டிருந்த சாரம் திடீரென சரிந்து மின் கம்பத்தின் மேல் விழுந்ததால், மின்கம்பி அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் சாரத்தை அப்பகுதி மக்களின் உதவியுடன் அப்புறப்படுத்தி மின் இணைப்பை மீண்டும் அமைக்க தீவிர பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

scroll to top