திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில், பூக்குழி திருவிழா தேரோட்டம்

ther.jpg

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலின் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று, பிரசித்தி பெற்ற பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து இன்று, பூக்குழி திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டு உற்சாகமாக தேரை இழுத்தனர். கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்து, பெரிய மாரியம்மன் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

scroll to top