விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (32). சொந்த வியாபாரம் பார்த்து வரும் சுந்தர்ராஜன், கடந்த 2020ம் ஆண்டு தான் பெற்ற மகளான 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்ற மகளை, குழந்தையென்றும் பார்க்காமல் பாலியல் தொந்தரவு செய்த சுந்தர்ராஜன் மீது திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். சம்பவம் பற்றிய வழக்கு, திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரணஜெய ஆனந்த், குற்றவாளி சுந்தர்ராஜனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், குற்றவாளி சுந்தர்ராஜன் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், கூடுதலாக 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி பூரணஜெய ஆனந்த் தீர்ப்பு கூறினார்.
குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.