திருவண்ணாமலையில் சிவராத்திரி கொண்டாட்டம்

இன்று அனைத்து சிவ தலங்களிலும் சிவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  இதில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. இதற்காக கோவில் இர்ண்டாம் பிரகாரத்தில் இர்ண்டு டன் மலர்கள் குவிக்கப்பட்டுள்ளன. இன்று திருவண்ணாமலை கோவிலில் வெகுநாட்களுக்குப் பிறகு பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாக, மக்கள் திரலாக வந்து இறைவனை வணங்கி உள்ளனர்.  பக்தர்கள் திருவண்ணாமலை  அண்ணாமலையார் திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அங்கப் பிரதட்ச்னம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அனைத்து இசை நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.  தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் வெகுவாக தளர்வு அறிவிக்கப்பட்டதால் இன்று கோவில் ராஜகோபுரம் முன்பு கிரிவல நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்களின் இசை விழா நடந்துள்ளது.

scroll to top