திருமேனி நாதர் ஆலய தேரோட்டம்

WhatsApp-Image-2023-04-04-at-19.19.03.jpg

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நடைபெற்ற விழா நாட்களில் சுவாமி அம்பாள் சமேதமாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தேரோட்டம் , முன்தினம் இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. இதில், அம்பாள் இளம்சிவப்பு பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

விழாவில், அருப்புக்கோட்டை, மதுரை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தின்போது, அன்னதானம் மற்றும் நீர், மோர் வழங்கப்பட்டது . திருச்சுழி டி.எஸ்.பி.ஜெகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

scroll to top