திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி கிடையாது – அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil_Balaji_in_press_conference.jpg

அமைச்சர் செந்தில் பாலாஜி திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதனை மறுத்துள்ளார். சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

scroll to top