திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்,திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.