திருமங்கலம் பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

WhatsApp-Image-2023-05-10-at-11.08.20-AM.jpeg

மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், ஒரே நாளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில், சிறப்புரை நிகழ்த்திய மதுரை தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர். சேடப்பட்டிமணிமாறன், திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ,
திமுக அரசு பெண்களுக்கான அரசு எனவும் , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து திட்டங்களையும் வகுத்து வருகிறார் , பெண்களுக்கு சொத்துரிமையில் சம பங்கு, பெண்கள் அரசு பள்ளியில் பயின்றால் அவர்களுக்கு அரசு செலவில் கல்வி, விரைவில் குடும்பப் பெண்களுக்கு மாதம் தோறும் உரிமை தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம், இவ்வாறு பல்வேறு வகையான திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் தலைவர் மு .க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருவதை கிராம மக்களுக்கு எடுத்து விளக்கிப் பேசினர் .

டி.புதுப்பட்டி கிராமத்தில், தெற்கு ஒன்றியச்செயலாளர் ஆலம்பாடி சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு பங்கேற்றனர்.

scroll to top