திருமங்கலம் அருகே ரத்தக் காயங்களுடன் திரியும் மயில்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல், உரப்பனுர் போன்ற சுற்றுவட்டார கிராமப் பகுதியில், வழக்கம்போல் மயில்கள்  உலா வந்து கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக இரத்தக் காயங்களுடனும், ரோமங்கள் உதிர்ந்த நிலையிலும் பல மயில்கள் இப்பகுதியில் சுற்றித் திரிந்ததில், சில மயில்கள் திடீரென இறந்ததால், நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டு உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் கொள்கின்றனர்.ப இதையடுத்து,  தற்போது, திருமங்கலம் அருகில் உள்ள கரடிக்கல் பகுதியில், உள்ள ஊராண்ட உரப்பனூர் கிராமத்தில், ஊரணிக்கரை அருகில் காலில் அடிபட்ட மயில் ஒன்றும், உடலில் இரத்தத் காயங்களுடனும் மற்றொரு மயிலும் உடல் சோர்வுற்று தனக்கான உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல், மயங்கி கிடந்தன. இதை அறிந்த, பொதுமக்கள் மதுரை மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததனர்.
இதையடுத்து, மேற்கண்ட சம்பவ இடம் எந்த வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் வரும் என ,குழம்பிய வனத்துறையினர் நீண்ட நேரத்திற்கு பின், உசிலம்பட்டி வனச்சரகம் என அடையாளம் கண்டனர். பின்னர், உசிலம்பட்டி வனச்சரக வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம்பட்ட மயில்களை மீட்டு சென்றனர். இது குறித்து, இப்பகுதி மக்கள் கூறுகையில், வன உயிரினங்களை பாதுகாக்க தற்போது, பயன்பாட்டில் உள்ள தொலைபேசி மையத்தை தரம் உயர்த்தக்கோரியும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் போன்ற சுற்றுவட்டாரப்பகுதிகளை உள்ளடக்கிய வனச்சரகம் ஒன்றை புதிதாக அமைக்க தமிழக அரசும், வனத்துறையும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

scroll to top