திருமங்கலத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம்

WhatsApp-Image-2021-10-05-at-4.01.24-PM.jpeg

மதுரை மாவட்டம், திருமங்கலம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 16-வது வார்டுக்கு, அதிமுக சார்பில் தமிழகு, திமுக சார்பில் ஜெயராஜ், மக்கள் நீதி மையம் சார்பில் என். முத்துவடிவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளரை, ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் மற்றும் அதிமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் தலைமையில், அக் கட்சியினர் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இதேபோல, திமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடபட்டி இரா. முத்தையா, மாவட்டச் செயலாளர் மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும், மக்கள் நீதி மைய வேட்பாளரை ஆதரித்து, அண்ணாநகர் முத்துராமன் தலைமையில், நகரச் செயலாளர் ராமலிங்கம்,ஐராவதநல்லூர் கிளைச் செயலாளர் பூமிராஜா ஆகியோர்கள், மாவட்டச் செயலர் அழகர் ஆலோசனையின் பேரில், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்தனர்.
இங்கு மும்முனை போட்டி கடுமையாக உள்ளது.

scroll to top