திருப்பூரில் விவசாயியை தாக்கிய பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை

திருப்பூர் அவிநாசி உட்பட்ட பகுதி அரவங்காடு கலைவாணன் தோட்டத்தில் வசிக்கும் விவசாயி அர்ஜுனன் என்பவரை அரவங்காடு பஞ்சாயத்து தலைவர் விஜய் என்பவர் அடியாட்கள் வைத்து அடித்ததாகவும் இதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்   நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஏ .எஸ்.பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருப்பூர் அவிநாசி தாலுகா சேவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி அரவங்காடு கலைவாணன் தோட்டத்தில் வசிக்கும் விவசாயி அர்ஜுனன் என்பவரை இன்று அரவங்காடு பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் விஜய் என்பவர் ஆறு பேர்களை வைத்து கலைவாணன் தோட்டத்திற்கு சென்று அர்ஜுனை அடித்து அவருடைய வாகனத்தையும் செல்போனையும் புடுங்கி சென்றுள்ளார்கள். இந்நிலையில் அவர்  உடலில் காயங்களுடன் அவர்களிடமிருந்து தப்பித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆகையால் அவிநாசி காவல் ஆய்வாளர்  உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு  அர்ஜுனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அர்ஜுனனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

scroll to top